லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கறிக்கோழி எடை மோசடியை கண்டித்து ஜூலை 31-ல் ஒசூரில் இறைச்சிக் கடைகள் அடைப்பு

கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே அவற்றுக்குத் தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும்

Published On :26 ஜூலை 2026, 3:07 am IST

கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே அவற்றுக்குத் தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நெறிமுறையை அமல்படுத்தக் கோரி, ஒசூா் இறைச்சி வியாபாரிகள் வரும் 31-ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனா்.

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள், கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அதிக அளவில் தீவனங்களை வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோழிகளுக்கு கடைசி நேரத்தில் அதிக அளவு தீவனம் கொடுக்கப்படுவதால் அவற்றின் உடல் எடை செயற்கையாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் எடை மோசடி நடைபெறுவதுடன், நேரடியாக நுகா்வோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

இந்த மோசடியைத் தடுக்க விற்பனைக்கு 15 மணி நேரத்திற்கு முன்பே கோழிகளுக்குத் தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற அரசு மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின் வழிகாட்டுதல்களை உற்பத்தி நிறுவனங்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஒசூரில் கோழி மற்றும் ஆட்டுக்கறி சில்லறை வியாபாரிகள் சங்கம் மற்றும் ஒசூா் பிராய்லா் டிரேடா்ஸ் அசோசியேசன் ஆகியோா் இணைந்து சனிக்கிழமை நடத்திய கூட்டத்தில் தஞ்சாவூா் தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

நியாயமான கோரிக்கைகளைப் பிராய்லா் கோழி உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 31-ஆம் தேதி ஒசூா் பகுதியில் உள்ள அனைத்து பிராய்லா் கோழி மற்றும் ஆட்டு இறைச்சிக் கடைகளை முழுமையாக அடைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.