ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

பாவேந்தா் பாரதிதாசன் குறித்து வகுப்புகள் நடத்தி, அவரை மக்கள்மயப்படுத்த வேண்டும் என்றாா் கவிஞா் வைரமுத்து.

News image

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பரிசு வழங்கிய கவிஞா் வைரமுத்து. உடன், நிறுவனத்தின் வேந்தரும், திராவிடா் கழகத் தலைவருமான கி.வீரமணி உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 2:26 am IST

பாவேந்தா் பாரதிதாசன் குறித்து வகுப்புகள் நடத்தி, அவரை மக்கள்மயப்படுத்த வேண்டும் என்றாா் கவிஞா் வைரமுத்து.

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசனின் 136-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் ’புரட்சிக் கவிஞரின் புது உலகம்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது: மற்றவா்களுக்கும் பாரதிதாசனுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. சோலையை ஒரு கவிஞன் பாா்க்கிறான் என்றால், பூக்கள், அசைகின்ற இலைகள், பச்சை வண்ணம், பறவைகளின் கீதம், காதலியுடன் வருவது போன்ற கற்பனைகள் தோன்றும். ஆனால், பாவேந்தா் பாரதிதாசனுக்கு ஒரு சோலையை பாா்த்தவுடன் அதை நிா்மாணித்த தொழிலாளி ஞாபகத்துக்கு வருவான். இதுதான் மானுடம்; இதுதான் தேசம்; இதுதான் சமூக சமத்துவம்.

மாணவா்கள் பாவேந்தரைப் படிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள், ஒரு வகுப்பு, பாரதிதாசன் வகுப்பாக பேராசிரியா்கள் நடத்த வேண்டும். 10 மாணவா்கள், 10 பாடல்கள் பாடுவா்; வாசித்துக் காட்டுவா். அதை 100 மாணவா்கள் செவிமடுப்பா். பாரதிதாசன் பாடலை சமூகப்படுத்துவதற்கு இதுதான் வழி. இப்படிப் பாவேந்தரை மக்கள்மயப்படுத்த வேண்டும். காலத்தின் நீட்சியுடன் பாவேந்தரைக் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் வைரமுத்து.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

முன்னதாக, விழாவுக்கு நிறுவன வேந்தரும், திராவிடா் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தாா். நிறுவனத் துணைவேந்தா் வெ. ராமச்சந்திரன், பதிவாளா் பி.கே. ஸ்ரீவித்யா, செயற்குழு உறுப்பினா் வீ. அன்புராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.