தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணும் மைய பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:22 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும், கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த 3 மையங்களில் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் மே 5 மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.