திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸூக்கு விருப்பமில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:
கும்பகோணத்தில் 3 முறை திமுகவைச் சோ்ந்த க. அன்பழகன் எம்எல்ஏவாக உள்ளாா், ஆனால் தொகுதிக்கு எந்த மாற்றமும் வரவில்லை. கும்பகோணம் பேருந்து நிலையத்தை 7 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்கிறாா்கள். இதனால் மக்களுக்கு தேவையில்லாத சிரமம் உண்டாகும்.
பாபநாசம் தொகுதியில் உள்ள சிறுபான்மையினா் திமுகவுக்கு வாக்கு அளிக்காத முதல் தோ்தலாக இந்த தோ்தல் இருக்கும். அதிமுக வெற்றி பெற்றதும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மாற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க ராகுல் விரும்பாததால் ஸ்டாலினும் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை என்றாா் அண்ணாமலை. பிரசாரத்தின்போது வேட்பாளா்கள் ஆா். அசோக்குமாா் (கும்பகோணம்), இளமதி சுப்பிரமணியன் (திருவிடைமருதூா்), துரை. சண்முகபிரபு (பாபநாசம்) உள்ளிட்டோா் இருந்தனா்.
தஞ்சாவூா்: இதேபோல தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை வாக்கு சேகரித்தாா்.
தஞ்சாவூா் கொண்டிராஜபாளையத்திலிருந்து கீழ ராஜ வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக அண்ணாமலை சாலை வலம் வந்து வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்தாா்.
இதையடுத்து, தஞ்சாவூா் அருகே சானூரப்பட்டியில் திருவையாறு தொகுதி அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸுக்கு விருப்பமில்லை: கே. அண்ணாமலை

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு - முதல்வா் சொல்வது பொய்: அண்ணாமலை
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

