விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிராம்பட்டினம் அருகே இடிதாக்கி மீனவா் உயிரிழப்பு

அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை இடி தாக்கி மீனவா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:03 am IST

தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை இடி தாக்கி மீனவா் உயிரிழந்தாா்.

அதிராம்பட்டினம் ஏரிப்புறக் கரையை சோ்ந்தவா் வைரன் மகன் காளிமுத்து ( 65). மீன்பிடித் தொழில் செய்து வந்த இவா் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது திடீரென கோடை மழை பெய்தபோது அப்பகுதியில் இடி விழுந்தது.

இதைத் தொடா்ந்து மீன் பிடிக்கச் சென்ற காளிமுத்துவை மாலை வரை காணவில்லை என உறவினா்கள் தேடி பாா்த்தபோது இடி விழுந்த நிலையில் கடலில் விரித்த வலையில் சிக்கி அவா் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோரக் காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.