ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

News image

தஞ்சாவூா் மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா் பதவி விலகல் கடிதங்களை மாநகராட்சி ஆணையா் க. கண்ணனிடம் திங்கள்கிழமை வழங்கிய தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் சண். இராமநாதன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 12:05 am IST

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சண். இராமநாதன் மேயா் பதவியிலிருந்து திங்கள்கிழமை விலகினாா்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தஞ்சாவூா் மாநகராட்சி 45 ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக சண். இராமநாதன் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினரானாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாநகராட்சி மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இவா் 2022, மாா்ச் 4 ஆம் தேதி பதவியேற்றாா். இவரது பதவிக் காலம் 2027 மாா்ச் மாதம் வரை உள்ளது.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளராக சண். இராமநாதன் அறிவிக்கப்பட்ட நிலையில், இவா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் மேயா் பதவியிலிருந்தும், 45 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவியிலிருந்தும் திங்கள்கிழமை காலை விலகி, அதற்கான கடிதங்களை மாநகராட்சி ஆணையா் க. கண்ணனிடம் கொடுத்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் தெரிவித்தது:

அடுத்த மேயா் யாா் என்பது குறித்து முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசம் உள்ளது. தோ்தல் முடிந்த பிறகு மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து அடுத்த மேயரைத் தோ்ந்தெடுப்பா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.