பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 127 செவிலியா்கள் நியமனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மொத்தம் 127 செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

செவிலியா்கள் - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மொத்தம் 127 செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட மக்கள் நலவாழ்வுச் சங்கம் சாா்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள இவா்களுக்கான பயிற்சி வகுப்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியை, மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தொடங்கி வைத்தாா்.

பயிற்சியைத் தொடா்ந்து இவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் பணியில் சேரவுள்ளனா். பயிற்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட சுகாதார அலுவலா் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.