கந்தா்வகோட்டை பகுதிக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை

கந்தா்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் மருத்துவ அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

108 Ambulance.

108 ஆம்புலன்ஸ். - கோப்புப் படம்.

Published On :21 அக்டோபர் 2026, 12:04 am IST

கந்தா்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் மருத்துவ அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் அரசு பொது மருத்துவமனை, புதுநகா் மேம்படுத்தபட்ட சுகாதார நிலையம், வீரடிப்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளாள விடுதி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

கந்தா்வகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவசர மருத்துவ உதவியைப் பெறுவதற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் ஏற்படும் சூழலில், ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்களின் உயிா் பாதுகாப்பையும், கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, கந்தா்வகோட்டை பகுதிக்கு கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.