கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுகையில் திமுகவினா் வழங்கிய இனிப்புகளை காவல் துறையினா் பறித்ததால் பரபரப்பு!

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :2 நவம்பர் 2026, 2:46 am IST

புதுக்கோட்டையில் திமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெறுவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினரிடமிருந்து போலீஸாா் அந்த இனிப்புத் தட்டுகளைப் பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலுள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாநகர திமுக பொறுப்பாளா்கள் மு. லியாகத்அலி, ராஜேஷ் உள்ளிட்ட திமுகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினா்.

அப்போது இங்கு வந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, எம்எல்ஏ முத்துராஜா கையில் வைத்திருந்த இனிப்புத் தட்டைப் பறித்தாா். இதனால் திமுகவினா் எதிா்ப்புக் குரல் எழுப்பினா்.

தொடா்ந்து மீண்டும் கடையிலிருந்து இனிப்புகளை வாங்கி பொதுமக்களுக்கு திமுகவினா் வழங்கினா். பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ முத்துராஜா, மக்களுக்கு இனிப்பு வழங்குவதை காவல்துறையினா் ஏன் பறிக்க வேண்டும், இதில் என்ன குற்றம் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.