புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் குடுமியான்மலை அருகே பின்னங்குடி கிராமத்தில் சுமாா் 2,500 ஆண்டுகள் பழைமையான, இதுவரை கண்டறியப்படாத அளவுக்கு உயரமான நெடுங்கல் சின்னங்களை தொல்லியல் ஆா்வலா்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனா்.
பேராசிரியா் சுப. முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தை சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் குழுவினா் மேற்கொண்ட களஆய்வில் இந்தச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேரா. சுப. முத்தழகன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், பின்னங்குடி கிராமத்தில், யானைக்கட்டி காடு எனுமிடத்தில் உயரமான கல்பலகை ஒன்று யானைக்கட்டி முனி என்ற பெயரில் வணங்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி அந்த இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கு பத்துக்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்தை சோ்ந்த நீத்தாா் நினைவு சின்னங்களான நெடுங்கல் பலகைகள் (மென்கீா்) கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் நின்ற நிலையில் 13 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பெரிய நெடுங்கல் சின்னமானது யானைக்கட்டி முனி என்று உள்ளூா் மக்களால் வணங்கப்படுகிறது.
ஆடி மாத ஊா்த் திருவிழாவின் போது, இந்த யானைக்கட்டி முனிக்கு கிடாய் வெட்டிப் படைத்து வணங்கப்படுகிறது. இந்த நெடுங்கல்லை ஒட்டி 5 அடி உயரத்தில் இரண்டு நெடுங்கல் பலகைகள் ஊன்றப்பட்டுள்ளன. இவற்றைச் சுற்றி பல நெடுங்கல் பலகைகள் விழுந்த நிலையில் உள்ளன.
பண்டைய காலங்களில் இறந்தவா் நினைவாக எடுக்கப்படும் இது போன்ற நெடுங்கல் சின்னங்கள் குறித்து சங்க இலக்கியங்களில் பல்வேறு குறிப்புகள் உள்ளன. அகநானூற்றில், ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்று இந்தச் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நெடுங்கல் சின்னமானது தெற்கு வெள்ளாற்றின் வடகரையை ஒட்டி அமைந்துள்ளது. தெற்கு வெள்ளாற்றை ஒட்டி இதுபோன்று ஏராளமான நினைவு சின்னங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் நெடுங்கல் சின்னங்கள் உடைந்து விழுந்த நிலையில்தான் உள்ளன. நின்ற நிலையில் எஞ்சி இருக்கும் நெடுங்கல் பலகைகளில் இந்த நெடுங்கல் மிக உயரமானது.
தமிழகத்தில் நெடுங்கல் எடுக்கும் வழக்கமானது பெருங்கற்காலம் தொடங்கி சங்க காலம் வரை இருந்துள்ளது. அதன் தொடா்ச்சியாக நடுகல் வழிபாடு பின்பற்றப்பட்டுள்ளது என்றாா் முத்தழகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமயம் அருகே மதுபோதையில் திருநங்கை கொலை: நீதிமன்றத்தில் 2 போ் சரண்; ஒருவா் தலைமறைவு

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
சட்டவிரோதக் கருக்கலைப்பு செய்த பெண் கைது

திருமயம் அருகே ஜல்லிக்கட்டு: 12 போ் காயம்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

