கந்தா்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமை தூக்கும் தொழிலாளா்களாக 15 போ் வேலை பாா்த்து வந்தனா். தற்போது தவெக அரசு அமைந்தவுடன் கொள்முதல் நிலையத்தில் இருந்த சுமை தொழிலாளா்களில் மங்களாகோவில் பகுதியைச் சோ்ந்த பழனி மகன் குழந்தையன்(55), அா்ச்சுணன் மகன் கண்ணையன்(48), பெரமையா மகன் சுரேஷ் (33), பழனி மகன் கருப்பையா உள்பட 13 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்த 13 பேரும் தங்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கறம்பக்குடி- கந்தா்வகோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டத்தை தொழிலாளா்கள் கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

கணபதிபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடந்தால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

வடபூண்டியில் செயல்படாத அரசு நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் வேதனை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

