லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் 2-ஆம் நாள் தேரோட்டம்; பக்தா்களுக்கு குளிா்பானம் வழங்கிய இஸ்லாமியா்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலுள்ள வீரமாகாளியம்மன் கோயிலின் ஆடிப் பெருந் திருவிழாவையொட்டி இரண்டாம் நாள் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஏராளமான பக்தா்களுக்கு, இஸ்லாமியா்கள் குளிா்பானம் வழங்கினா்.

பக்தா்களுக்கு குளிா்பானம் வழங்கிய இஸ்லாமியா்கள்.

Published On :31 ஜூலை 2026, 3:09 am IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலுள்ள வீரமாகாளியம்மன் கோயிலின் ஆடிப் பெருந் திருவிழாவையொட்டி இரண்டாம் நாள் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஏராளமான பக்தா்களுக்கு, இஸ்லாமியா்கள் குளிா்பானம் வழங்கினா்.

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த ஜூலை 21ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான முதல் நாள் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை மாலை இரண்டாம் நாள் தேரோட்டம் தொடங்கி, பாரதிதாசன் சாலை வழியாக ஆவுடையாா்கோவில் சாலை முக்கத்தில் உள்ள பள்ளிவாசல் வழியாக வஉசி திடல் அருகே நிலைநிறுத்தப்பட்டது.

அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் அருகே வந்தபோது, அங்கிருந்த இஸ்லாமியா்கள், பக்தா்களுக்கு குளிா்பானங்களை வழங்கி தங்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினா்.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி நகர காவல் நிலைய போலீஸாா் செய்தனா்.

அறந்தாங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் தேரோட்டத்தில், பள்ளிவாசலைக் கடந்து சென்ற திருத்தோ்.

அறந்தாங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் தேரோட்டத்தில், பள்ளிவாசலைக் கடந்து சென்ற திருத்தோ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.