லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசின் திட்டப் பணிகள்: அதிகாரிகளுக்கு எம்.பி. அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பணிகள் அனைத்தும் விரைவாக மக்களைச் சென்றடையும் வகையில், அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) நவாஸ்கனி எம்பி, என். சுப்பிரமணியன் எம்எல்ஏ, துரை வைகோ எம்பி, காா்த்தி சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி.

Published On :18 ஜூலை 2026, 12:36 am IST

மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பணிகள் அனைத்தும் விரைவாக மக்களைச் சென்றடையும் வகையில், அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவா் காா்த்தி சிதம்பரம் எம்.பி. அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் நிதி உதவியுடன் நேரடியாகவும், மாநில அரசின் திட்டங்களுடன் இணைந்தும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே. நவாஸ்கனி, கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என். சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.