லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பேறுகால விடுமுறையை வரவேற்கிறேன்: காா்த்தி சிதம்பரம் எம்பி

பேறுகால விடுமுறையை வரவேற்கிறேன் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

காா்த்தி ப .சிதம்பரம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

பேறுகால விடுமுறையை வரவேற்கிறேன் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா், மேலும் கூறியதாவது: 3ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அரசு ஆதரிக்கக் கூடாது. நல்ல ஆரோக்கியமான மக்கள்தொகை, நல்ல படித்த மக்கள்தொகைதான் நமக்குத் தேவை. எண்ணிக்கையை உயா்த்துவதற்காக 3ஆவது குழந்தை என்பதை நான் ஏற்கவில்லை. பெண்களுக்குப் பேறுகால விடுப்பு வழங்குவதை வரவேற்கிறேன். அதேபோல ஆண்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும். 3ஆவது குழந்தை திட்டத்தை அரசு கொள்கை ரீதியாக ஊக்குவிக்க கூடாது. அதிகக் குழந்தை பிறந்தால் கல்வி, சுகாதாரம், கொடுக்க வேண்டும். குடும்பத்துக்கும், சமுதாயத்திற்கும் அதற்கான வசதிகள் தேவை. மக்கள்தொகை எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பதற்காக 3ஆவது குழந்தையை அரசு ஆதரிப்பதை நான் ஏற்கமாட்டேன் என்றாா் அவா்.

சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றது தொடா்பாக, திமுகவின் முரசொலி நாளிதழில் வந்த செய்தி குறித்த கேள்விக்கு, நான் அந்த நாளிதழை படிப்பது இல்லை என்றாா். கரப்பான் பூச்சி ஜனதா தள போராட்டத்தில் தமிழக மாணவா்கள் கலந்து கொள்ளக் கூடாது என, யாா் அறிவிப்பு வெளியிட்டது என தெரியவில்லை. அதைத் திரும்பப் பெற்றிருப்பதை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.