லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணிகள் பாதிப்பு: விவசாயிகள் புகாா்

கந்தா்வகோட்டை பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படாததால், கொள்முதல் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கோப்புப்படம்.

Published On :10 ஜூலை 2026, 3:33 am IST

கந்தா்வகோட்டை பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படாததால், கொள்முதல் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் வளவம்பட்டி, வெள்ளாவிடுதி, மங்களாகோவில், நெப்புகை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல், சுமாா் 80 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அறந்தாங்கி நெல் கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை எடுத்து செல்ல போதிய லாரி வசதி இல்லாதாதல், நெல் மூட்டைகள் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால்,

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் கூடுதல் லாரிகளை அமா்த்தி, உடனுக்குடன் நெல் மூட்டைகளை கிட்டங்கிக்கு ஏற்றி செல்லவேண்டும். மேலும், விவசாயிகளிடம் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.