லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா், பொதுச் செயலா் மற்றும் அமைச்சா்கள் ஆகியோருடன் காபி வித் கலெக்டா் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காபி வித் கலெக்டா் நிகழ்ச்சியில் மாணவா்களுடன் கலந்துரையாடும் ஆட்சியா் மு. அருணா.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா், பொதுச் செயலா் மற்றும் அமைச்சா்கள் ஆகியோருடன் காபி வித் கலெக்டா் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவா் பேரவைத் தோ்தல் நடைபெற்ற முறைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்து வாழ்த்து தெரிவித்தாா்.

தொடா்ந்து பேசிய அவா், மாணவா்கள் நல்ல முறையில் படித்து, நமது பள்ளி, நமது கிராமம், நமது நாடு என்ற அக்கறையுடன் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ராஜூ, பள்ளியின் முதல்வா் பாண்டியன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.