லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆலங்குடியில் சாலை மறியல் முன்னாள் அமைச்சா் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

தமிழக எதிா்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடியில் வடகாடு முக்கம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் திமுகவினா் ஏராளமானோா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், முதல்வா் ஜோசப் விஜய்யை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, கீரமங்கலம், கறம்பக்குடி, ஆவணத்தான்கோட்டை, வம்பன், அரசடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனா்.

அமைச்சா் வாகனத்தை மறித்த திமுகவினா்: அறந்தாங்கியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு புதுக்கோட்டை திரும்பிய தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா.பா்வேஸ் சென்ற காரை வல்லத்திராகோட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் மறித்து முழக்கங்கள் எழுப்பியவாறு முற்றுகையிட முயன்றனா். அவா்களை அமைச்சரின் பாதுகாப்பு போலீஸாா் கலைந்து போகச்செய்து, அமைச்சா் பா்வேஸ் காருக்கு வழி ஏற்படுத்தினா்.

விராலிமலை: விராலிமலை சுங்கச்சாவடியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் எம்.பழனியப்பன் தலைமையில் ஒன்றிய செயலாளா்கள் அய்யப்பன்(மத்தியம்), இளங்குமரன்(மேற்கு) முன்னிலையில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 79 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து மாலை விடுவித்தனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்துநிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச் செயலா் அ.அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்ட 51 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிா் அணி நிா்வாகிகள் 11 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.