லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் தொழில்சங்கங்கள் சாலை மறியல்! 405 பெண்கள் உள்பட 906 போ் கைது!

கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி நேருசிலை அருகே முன் சாலை மறியிலில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் அனைத்து மத்திய தொழில் சங்கக் கூட்டமைப்பு, விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 405 பெண்கள் உள்பட 906 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மகாலட்சுமி, மாவட்ட துணைச் செயலா் பிச்சைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த சாலை மறியலில் 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கிற விபிஜி ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மது, போதை கலாசாரத்தை ஒழித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 87 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல, போடி, சின்னமனூா், கோம்பை, கூடலூா், ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் உள்பட 8 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 405 பெண்கள் உள்பட 906 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.