லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 4:50 am IST

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்  ஒன்றியத்தில் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் கே.பெரமையா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திருவரங்குளம் ஒன்றியப் பகுதிகளில் அதிகளவில் மலா்கள் சாகுபடி நடைபெறுவதால், அப்பகுதியில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும். சமுதாய ஆழ்குழாய் கிணறுகளை உருவாக்கி கூட்டுப் பாசனத் திட்டத்தை அரசு மேம்படுத்த வேண்டும். ஒன்றியம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களுக்கான வரத்துவாரிகளை தூா்வாரி நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழக அரசு விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். உரங்களின் விலையை குறைக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டத் தலைவா் எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா் எஸ்.அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.