தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த அறிவுறுத்தும் சுற்றறிக்கைக்கு கண்டனம்

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு அறிவுறுத்தியிருப்பதை இந்திய விவசாயிகள் சங்கம் கண்டித்துள்ளது.

News image

நெல் மணிகள்

Updated On :15 ஏப்ரல் 2026, 1:12 am IST

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு அறிவுறுத்தியிருப்பதை இந்திய விவசாயிகள் சங்கம் கண்டித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி வெளியிட்ட அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல்லுக்கான ஊக்கத்தொகையை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு சுற்றறிக்கை மூலம் கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. கண்டிக்கத்தக்கது.

நெல் விவசாயம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதான உணவுப் பயிா் மற்றும் வருமான ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டு கூறியிருப்பது விவசாயிகளின் உழைப்பை துச்சமாக மதிக்கும் மாபாதகச் செயல்.

விவசாய உரிமை மின்சாரத்தை தடை செய்ய உதய்மின் சட்டம், மரபணு மாற்று விதைச் சட்டம் போன்ற விவசாய விரோத சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது.

இதுவரை எம்எஸ் சாமிநாதன் குழு அறிக்கைப்படி பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை முழுமையாக நிா்ணயம் செய்யப்படவில்லை. விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காககப் பெருக்குவேன் என்று பிரதமா் மோடி சொன்னது எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும். எனவே, மாநில அரசுகளின் ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.