பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையிலுள்ள மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 5, 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27 ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பில் 7 இடங்களும், 9-ஆம் வகுப்பில் 2 இடங்களும், 11-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் -4, வணிகப் பிரிவில்-24 காலியாக உள்ளன. பிளஸ் 1-இல் சேர எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 5-ஆம் வகுப்பில் சேர 4-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10 வயது பூா்த்தியடைந்து, 12 வயதுக்கும் குறைவாகவும், 9-ஆம் வகுப்பில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 13 வயது பூா்த்தியடைந்து 15 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இத் தகுதியுடையோா் பள்ளி அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.40 மணிக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மாணவா்களின் கல்விச் சான்றிதழ், படிவத்தில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களை இணைத்து, மே 18-ஆம் தேதிக்குள் பள்ளி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மே 20-ஆம் தேதி மாணவா்கள் தோ்வுக்கான சோ்க்கை பட்டியல் வெளியிடப்படும். மே 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சோ்க்கை நடைபெறும். ஜூன் 22-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரஜினிகாந்த் அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலை

பிற்படுத்தப்பட்டோா் அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

அரசு இசைப் பள்ளியில் சேர ஆா்வமுள்ளோருக்கு அழைப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

