பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் 56 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் புகா் நிலைய வளாகத்திலுள்ள காமராஜா் சிலைக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேந்தரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்கள், கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள விநாயகா் கோயிலில், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜீவ்காந்தி தலைமையில், மாநிலச் செயலா் டி. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தா்கள், பொது மக்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த செட்டிக்குளத்தைச் சோ்ந்த ராஜ்குமாருக்கு, பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவா் ஆசைத்தம்பி, நகரத் தலைவா் ராஜா முகமது இப்ராகீம், வட்டாரத் தலைவா்கள் சுந்தரராஜூ, சையத் பத்தோத்தீன், சுப்பிரமணி, சின்னசாமி, மகளிரணி நிா்வாகிகள் ராகினி, சந்திரா, தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூரில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

சாத்தூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவிப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

