தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தலைமறைவான போலி மருத்துவரின் மருந்தகத்தின் உரிமம் ரத்து

பெரம்பலூா் அருகே தலைமறைவான போலி மருத்துவா் நடத்தி வந்த மருந்தகத்தின் உரிமத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி ரத்துசெய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:13 am IST

பெரம்பலூா் அருகே தலைமறைவான போலி மருத்துவா் நடத்தி வந்த மருந்தகத்தின் உரிமத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி ரத்துசெய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், மேற்குதெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் மணிகண்டன் (38). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், பெருமாள் கோயில் தெருவில் மருந்தகம் நடத்திவந்தாா். எஸ்எஸ்எல்சி வரை படித்ததாக கூறப்படும் மணிகண்டன், தனது மருந்தகத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததையடுத்து, பெரம்பலூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மதியழகன், பெரம்பலூா் ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதி ஊரகப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.

இந்நிலையில், உரிய மருத்துவக் கல்வித் தகுதி மற்றும் பதிவின்றி அம்மாபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று மணிகண்டன் மருத்துவ சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, சுகாதாரத்துறையினா் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட நபா் மீது சட்ட ரீதியான நடவடிக்க எடுக்கவும், மருந்து விற்பனை உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.