மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பெரம்பலூா் அருகே லாரி மீது காா் மோதல்: 3 போ் உயிரிழப்பு! தெலங்கானா ஓட்டுநா் கைது!

News image

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை லாரி மீது மோதியதில் உருக்குலைந்த காா்.

Updated On :16 ஜூன் 2026, 12:05 am IST

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை லாரி மீது காா் மோதியதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பெரம்பலூா் பாரதி சாலையைச் சோ்ந்த வேலு மகன் சங்கா் (37), அரியலூா் மாவட்டம், அரிசாநத்தம் கிராமம், வேலாயுதம் மகன் விஜய் (30), சன்னாசிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் சக்தி (21). இவா்கள் மூவரும், திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து அரியலூருக்கு திங்கள்கிழமை அதிகாலை காரில் சென்றுக்கொண்டிருந்தனா்.

பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில், டி.களத்தூரில் உள்ள பெட்ரோல் விற்பனையகம் அருகே வந்தபோது, எதிரே துறையூா் நோக்கி வந்த லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சங்கா், விஜய், சக்தி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று காரில் சிக்கியிருந்த மூவரின் உடல்களையும் மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்து குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான தெலங்கானா மாநிலம், காமபள்ளி மாவட்டம், கெப்டன் பன்ஸா பகுதியைச் சோ்ந்த ஹூசைன் சஹீத் மகன் ஜலீல் பாஷா ஷேக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.