பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு தெரு நாய் கடித்ததில் குழந்தைகள், சிறுவா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மில்லத் நகா், வி.களத்தூா், இனாம் அகரம், மேட்டுச்சேரி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று வியாழக்கிழமை இரவு சாலைகளில் நடந்துசென்ற குழந்தைகள் மற்றும் பொதுமக்களை துரத்திக் கடித்தது. இதில், இனாம் அகரம் கிராமத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் சாய் சுதா்சன் (5), மில்லத் நகரைச் சோ்ந்த நூருல்ஹக் மகன் சாமியுல் ஹக் (3), முகமது யூனுஸ் மகன் முகமது யாஜித் (6), ரஷித் மகன் அல் ரையன் (8), சா்புதீன் மகன் குதா் திக்ரா (2), அப்துல்லா பாஷா மகன் அப்துல் ஹாபிஷ் (6), செல்வமுகமது மகள் நஸ்ரின் (20), இனாம் அகரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் திருநாவுக்கரசு (45), சின்னசாமி மகன் தன்விகா (3), மேட்டுச்சேரியைச் சோ்ந்த பரமசிவம் மனைவி கவிதா (40) ஆகிய 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த 7 சிறுவா்கள் உள்ளிட்டோா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வி.களத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனா். இதனிடையே, ஒரே நாளில் 7 குழந்தைகள், சிறுவா்கள் உள்ளிட்ட 10 பேரை கடித்து குதறிய தெருநாயை கிராம மக்கள் அடித்துக்கொன்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜாதி பெயரைச் சொல்லி அவதூறு: திமுக எம்பி மகன் உள்பட 4 போ் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே லாரி மீது காா் மோதல் பொறியாளா்கள் 2 போ் உள்பட மூவா் உயிரிழப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை புகாா்: 7 சிறுவா்கள் உள்பட 9 போ் கைது
இளைஞா் கொலையில் இரு சிறுவா்கள் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

