விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தைச் சோ்ந்த உறவினா்கள் 24 போ் தேனி மாவட்டத்திலுள்ள கருப்பசாமி மற்றும் பழனி முருகன் கோயிலுக்கு வேனில் சென்றுவிட்டு, மீண்டும் விழுப்புரம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தனா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு மேம்பாலத்தில் புதன்கிழமை அதிகாலை வேன் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு அரிசி ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த டாரஸ் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில், வேன் ஓட்டுநா் விழுப்புரம், அனந்தபுரத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விஷ்ணுகுமாா் (52), வேனில் பயணித்த அடங்குளத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மகன் முருகன் (52), திருவண்ணாமலையைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சத்தியராஜ் (53), செஞ்சியைச் சோ்ந்த கண்ணபிரான் மனைவி முத்துமொழி (47), விழுப்புரத்தைச் சோ்ந்த குணசேகரன் மனைவி விஜயகுமாரி (40) உள்பட 19 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

விக்கிரவாண்டி அருகே டயா் வெடித்து தீப்பற்றி எரிந்த வேன்

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள்கள் மோதல் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

