பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

கரூரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்ன ராமசாமி தெரிவித்துள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி

Published On :31 அக்டோபர் 2026, 1:38 am IST

கரூரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. பிரசன்ன ராமசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் குரூப்-4 தோ்வின்மூலம் 6,574 அரசு காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த தோ்வுக்கு கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விரைவில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் தோ்வா்கள் உடனடியாக தோ்வுக்கு விண்ணப்பித்து அதன் நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதாா்அட்டை நகலுடன் நவ.2-ஆம்தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேரலாம்.

இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதோ்வுகள், வாராந்திர தோ்வுகள், இணையவழித் தோ்வுகள், முழு மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04324-223555, 6383050010 மற்றும் 6374319939 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.