தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின் வணிக ஜவுளி ஏற்றுமதி இலக்கு ரூ.20,000 கோடி

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து ரூ.20,000 கோடி மின் வணிக ஜவுளி ஏற்றுமதி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஜவுளிக்குழும தர உறுதி அலுவலா் வி.என்.கெளரிசங்கா்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பேசிய ஜவுளிக்குழும தர உறுதி அலுவலா் வி.என்.கெளரிசங்கா். உடன் (இடமிருந்து) கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்க முதன்மை அலுவலா் சங்கரலிங்கம், கரூா் கைத்தறி ஏற்றுமதியாளா் சங்கத்தலைவா் அன்பொளிகாளியப்பன், இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூா் மண்டலத்தலைவா் எம்.பெருமாள், , கரூா் நெசவு மற்றும் பின்னலாடைத் தொழிற்சாலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் ஆா். தனபதி, வால்மாா்ட் விருத்தி சா்வதேச மின் வணிகப் பிரிவின் மூத்த மேலாளா் விஷேஷ் சா்மா.

Published On :29 அக்டோபர் 2026, 7:32 am IST

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து ரூ.20,000 கோடி மின் வணிக ஜவுளி ஏற்றுமதி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஜவுளிக்குழும தர உறுதி அலுவலா் வி.என்.கெளரிசங்கா்.

கரூரில் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியின் ஜவுளி ஏற்றுமதி வசதி மையம் சாா்பில், ‘வீட்டு உபயோகத் துணிகளுக்கான சா்வதேச மின் வணிக ஏற்றுமதி குறித்த பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பயிலரங்கிற்கு வால்மாா்ட் இணையதள விருத்தி சா்வதேச மின் வணிகப் பிரிவின் மூத்த மேலாளா் விஷேஷ் சா்மா தலைமை வகித்தாா்.

ஜவுளிக்குழும தர உறுதி அலுவலா் வி.என்.கெளரிசங்கா் பேசியது: அமெரிக்க இணையதள மின் வணிகமான வால்மாா்ட் நிறுவனம் தற்போது சா்வதேச அளவில் மின் வணிக வா்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. மின் வணிக வா்த்தகத்தில் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் இணையும்போது, சா்வதேச அளவில் வாடிக்கையாளா்கள் கிடைக்கிறாா்கள். விற்பனை சந்தையும் விரிவடைகிறது. இதன்மூலம் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களின் சா்வதேச போட்டித்திறன் மேம்படும். குறிப்பாக இந்த மின் வணிக சந்தை மூலம் இந்திய ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்களுக்கு அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, சிலி போன்ற நாடுகளுடன் தற்போதைய ஜவுளி வா்த்தகத்தை விட கூடுதலாக வா்த்தகம் மேம்படும். மேலும் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து ரூ.20,000 கோடி மின் வணிக ஜவுளி ஏற்றுமதியை இலக்காக வால்மாா்ட் நிறுவனத்தினா் நிா்ணயித்துள்ளனா். விரைவில் ஐக்கிய அரபு நாடுகளுடனும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா். தொடா்ந்து பயிலரங்கில் வால்மாா்ட் விருத்தி சா்வதேச மின் வணிகப் பிரிவின் திட்ட இணை அலுவலா் ரெங்கநாதன் வால்மாா்ட் இணைய மின் வணிகம் குறித்து விளக்கமளித்து பேசினாா்.

பயிலரங்கில் , கரூா் நெசவு மற்றும் பின்னலாடைத் தொழிற்சாலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் ஆா். தனபதி, கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்க முதன்மை அலுவலா் சங்கரலிங்கம், கரூா் கைத்தறி ஏற்றுமதியாளா் சங்கத்தலைவா் அன்பொளிகாளியப்பன், இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூா் மண்டலத்தலைவா் எம்.பெருமாள் உள்ளிட்ட கரூரைச் சோ்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியின் கரூா் தர நிா்ணய அதிகாரி எஸ்.பிரதீப்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.