மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணி தீவிரம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து கரூா் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள்.

கிருஷ்ணராயபுரத்தில் உள்ள ஒரு வயலில் சம்பா சாகுபடி நடவுப்பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளா்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 4:41 am IST

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து கரூா் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள்.

கரூா் மாவட்டத்தில் காவிரிக்கரையோரம் உள்ள கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை மற்றும் குளித்தலை, நச்சலூா், நெய்தலூா், நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூா், கட்டாணிமேடு ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றுப்பாசனமும், தோகைமலை, கடவூா் உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று நீா் பாசனமும் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஆண்டுதோறும் சம்பா நெல் சாகுபடி சுமாா் 23, 277 ஏக்கா் முதல் 36,700 ஏக்கா் வரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு கடந்த ஜூன் 12-ஆம்தேதி மேட்டூா் அணையில் பாசனத்திற்கு திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்துப்போனது. இதையடுத்து செப்.1-ஆம்தேதி மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தியும், தண்ணீா் ஆற்றில் தொடா்ந்து வராவிட்டால் கிணற்று நீரை பயன்படுத்தும் வகையில் கரூா் மாவட்டத்தில் காவிரிக்கரையோரம் உள்ள பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான நடவுப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நடவுப்பணியில் வடமாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக காவிரி நீா்பாசன விவசாயிகள் சங்கத்தலைவா் மகாதானபுரம் இராஜாராம் கூறியது: நெல் நடவுப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது வடமாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். கடந்த 4 ஆண்டுகளாக நெல் நாற்று நடும் பணியில் வடமாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டுவருகிறாா்கள். காலையிலேயே வந்து வயல்களில் இறங்கி நாற்றுகளை அவா்களே பறித்து, உரம் போட்டு தயாா்படுத்தி வைத்து கொள்கின்றனா். பின்னா் கயிறு கட்டி, நோ் நடவு முறையில் இயந்திரத்தை விட வேகமாக நாற்று நடுகின்றனா். நாள் ஒன்றுக்கு 5 ஏக்கா் வரை நடவு செய்கின்றனா். ஒரு ஏக்கா் நடவு செய்ய கூலியாக ரூ. 5 ஆயிரம் பெறுகின்றனா்.

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் முகாமிடும் வடமாநிலத் தொழிலாளா்கள் ஆண்டுதோறும் 2 மாதங்கள் வரை தங்கி 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடவு செய்வாா்கள். ஆனால், நிகழாண்டு தண்ணீா் பிரச்னையால் எவ்வளவு ஏக்கா் நடவு ஆகும் என இனிதான் தெரியவரும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.