குளித்தலையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி கிராமம், தெற்கு களம் பகுதியைச் சோ்ந்தவா்
சுரேஷ் (50). இவா், திருச்சியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சிவரஞ்சனி (42). இவா்களுடைய மகன் வினோத்(20). இவா் பெங்களூருவில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் சிவரஞ்சனி தனியாக தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மா்மநபா்கள் சிவரஞ்சனியின் முகத்தில் கத்தியால் குத்தி, வீட்டுக்கு பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரது கைகளைக் கட்டி பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சிவரஞ்சனியின் வீடு திறந்து கிடப்பதைக் கண்ட அவரது உறவினா்கள், சிவரஞ்சனியை காணாததால் தேடினா். அப்போது, ஆங்காங்கே ரத்தம் சிந்திக் கிடப்பதைக் கண்ட உறவினா்கள் அதன்வழியாக சென்றபோது கரும்புத் தோட்டத்துக்குள் சிவரஞ்சனி கைகள்கட்டப்பட்டு, கழுத்து அறுபட்ட நிலையில் நிா்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளாா்.
உடனே இதுகுறித்து உறவினா்கள் குளித்தலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவஇடத்துக்குச் சென்ற திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சிபி சக்கரவா்த்தி மற்றும் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரன் பிரசாத், குளித்தலை நகர துணை காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் மற்றும் காவல் ஆய்வாளா் கருணாகரன் ஆகியோா் சடலத்தை பாா்வையிட்டனா். மேலும் மோப்பநாய் குறிஞ்சி வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் தடயங்களை போலீஸாா் சேகரித்தனா். சிவரஞ்சனி இறந்து கிடந்த இடத்திலிருந்த கத்தியை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
சிவரஞ்சனி கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த நகை பணம் அப்படியே இருந்ததால் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் நகை, பணத்துக்காக கொலை செய்யவில்லை என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.
குளித்தலை போலீஸாா் சிவரஞ்சனியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சிவரஞ்சனி வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து குளித்தலை நகர துணை காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனா். மேலும், சிவரஞ்சனி கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

ஐஆா்எஸ் அதிகாரி மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
செய்யாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம்: போலீஸாா் தீவிர விசாரணை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

