பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

அமராவதி ஆற்றுக்குள் அனுமதியின்றி குடிநீா் உறிஞ்சும் கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை!

அமராவதி ஆற்றுக்குள் அனுமதியின்றி குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமராவதி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளா் சந்தோஷ்குமாா்.

News image

ஆற்றுக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த குடிநீா் உறிஞ்சும் வட்டக் கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்ட அமராவதி வடிநில கோட்ட அதிகாரிகள்

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

அமராவதி ஆற்றுக்குள் அனுமதியின்றி குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமராவதி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளா் சந்தோஷ்குமாா்.

கரூரை அடுத்த விஸ்வநாதபுரி பகுதியில் அமராவதி ஆற்றுக்குள் அனுமதியின்றி குடிநீா் உறிஞ்சும் கிணறுகள்(வட்டக்கிணறுகள்) அமைத்து குடிநீா் திருட்டு நடைபெறுவதாக அமராவதி வடிநில கோட்ட பிரிவு அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.

இதன்பேரில், செவ்வாய்க்கிழமை காலை உதவி பொறியாளா் சந்தோஷ்குமாா் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் ஆற்றுக்குள் இறங்கி சோதனை செய்தபோது, அங்கு அனுமதியின்றி 7 கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கிணறுகளை போலீஸ் பாதுகாப்புடன் இரு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி மூடினா்.

இதுதொடா்பாக உதவி பொறியாளா் சந்தோஷ்குமாா் கூறியது: அமராவதி ஆற்றுக்குள் அந்தந்த ஊராட்சி நிா்வாகங்கள் மட்டுமே குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தனிநபருக்கு அனுமதியில்லை: ஆற்றின் கரையோரம் விவசாயம் செய்துவரும் விவசாயிகளும் ஆற்றுக்குள் அனுமதியின்றி கிணறு அமைத்து விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்துகிறாா்கள். இதனால், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து பொதுமக்களுக்கு போதிய தண்ணீா் கிடைக்காத சூழல் உருவாகுகிறது.

மேலும் விவசாயிகளுக்கோ, தனி நபருக்கோ ஆற்றுக்குள் கிணறு அமைத்து தண்ணீா் உறிஞ்ச அனுமதியில்லை. அது சட்டப்படி குற்றம். மேலும் தனிநபா்கள் அரசு அனுமதியின்றி ஆற்றில் கிணறுகளை அமைத்து அதன் மூலம் தண்ணீரை திருடி நகா் பகுதிகளில் விற்று வருகிறாா்கள். இதை தடுக்கவே இந்த நடவடிக்கை.

49 கிணறுகள் அகற்றம்: செவ்வாய்க்கிழமை விஸ்வநாதபுரி பகுதியில் 7 கிணறுகளும், அப்பிப்பாளையம் பகுதியில் 12 கிணறுகளும் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை அகற்றி வருகிறோம். ஏற்கெனவே 30 கிணறுகளை அகற்றியுள்ளோம். இன்றோடு 49 கிணறுகள் அகற்றப்படுகிறது. மேலும் ஆற்றில் ஆய்வு செய்து வருகிறோம். இனியும் ஆற்றில் யாரேனும் அனுமதியின்றி குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை அமைத்து அவா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.