லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடா் தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்

அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடா் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்க கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

முருங்கை - கோப்புப்படம்.

Published On :29 ஜூலை 2026, 12:03 am IST

அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடா் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்க கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் அரவக்குறிச்சி கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு வட்ட ஒருங்கிணைப்பாளா் கே.தங்கத்துரை தலைமை வகித்தாா்.

வட்ட இணை ஒருங்கிணைப்பாளா் அ. ஆரோக்கிய மேரி வரவேற்று பேசினாா்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.கலா துவக்க உரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் அ. சிங்கராயா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் செ. விஜயகுமாா் நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில் கரூா்- மதுரை செல்லும் பேருந்துகள் புங்கம்பாடி பிரிவு சாலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடா் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

அரவக்குறிச்சி மையப் பகுதியான ஏ.வி.எம் காா்னா் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.