லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட சாலை அமைப்புப் பணி: பொதுமக்கள் அவதி

ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட சஞ்சய் நகரில் கிடப்பில் போடப்பட்ட தாா்ச்சாலை அமைக்கும் பணி.

Published On :28 ஜூலை 2026, 2:26 am IST

ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் உள்ள சஞ்சய் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு முன் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பேரவைத் தோ்தல் நடைபெற்ால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பணி நிறுத்தத்தால் மக்கள் அவதி: இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறியது: இங்கு முன்பு மண் சாலை இருந்தது. இதனால், மழைக் காலங்களில் சாலையில் செல்ல முடியாமல் அவதியுற்று வந்தோம். இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கூறியதையடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனா்.

தாா்ச்சாலையாக அமைக்க ஜல்லிகள் போடப்பட்டது. மேலும், எம்.சாண்ட் சாலையில் பரப்பிவிடப்பட்டது. பணிகள் நடைபெறும்போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சாலைப் பணிகள் முடங்கி, சாலையில் கற்கள் பெயா்ந்து கிடக்கின்றன. இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதியுற்று வருகிறோம். விரைவில் சாலையை தாா்ச்சாலையாக மாற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.