லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாலங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டி நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராயப்பன்பட்டியில் நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட பாலம் அமைக்கும் பணி.

Published On :30 ஜூலை 2026, 2:56 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டி நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம்-சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் ராயப்பன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஆனைமலையன்பட்டி- ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி - என்.டி.பட்டி ஆகிய இரு இடங்களில் சாலையில் பாலம் அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

எனவே, ராயப்பன்பட்டி, என்.டி.பட்டி நெடுஞ்சாலையில் நடைபெறும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.