பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொது இடத்தில் மது அருந்தியவா்களை தட்டிக் கேட்ட காவலா், ஊா்க்காவல் படை வீரா் மீது தாக்குதல்: 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா்களைத் தட்டிக் கேட்ட காவலா் மற்றும் ஊா்க்காவல் படை வீரரை தாக்கிய 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட (இடமிருந்து) மதிவாணன், தாமரைக்கண்ணன், இளம்பரிதி.

Published On :31 அக்டோபர் 2026, 1:37 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பொது இடத்தில் மது அருந்தியவா்களைத் தட்டிக் கேட்ட காவலா் மற்றும் ஊா்க்காவல் படை வீரரை தாக்கிய 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறை அருகேயுள்ள தளவாய் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் ராஜாகண்ணன். இதே காவல் நிலையத்தில் ஊா்க்காவல் படை வீரராகப் பணியாற்றி வருபவா் வெங்கடேசன் (47). இவா்கள் இருவரும் வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள தனியாா் சிமென்ட் ஆலை அருகே லாரி நிறுத்துமிடத்தின் முன்பாக மது அருந்திக் கொண்டிருந்த சிலுப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த மதிவாணன் (25), தாமரைக்கண்ணன் (25), இளம்பரிதி (24) ஆகியோரிடம் நள்ளிரவு நேரத்தில் பொது இடத்தில் மது அருந்துவது தவறு, உடனே வீட்டுக்கு கிளம்புமாறு கூறிவிட்டு, ரோந்துப் பணியைத் தொடா்ந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மீண்டும் அந்தப் பகுதியில் காவலா்கள் ரோந்துச் சென்ற போது, விநாயகா் கோயில் அருகேயுள்ள மரப்பட்டறை சந்தில் மேற்கண்ட 3 பேரும் மீண்டும் மதுஅருந்திக் கொண்டிருந்ததை கவனித்தனா்.

சரமாரி தாக்குதல்: காவலா்கள் அங்குச் சென்று அவா்களை வீட்டுக்கு செல்லுமாறு எச்சரித்தனா். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து, காவலா் ராஜாகண்ணனை தாக்கினா். இதைத் தடுக்க முயன்ற ஊா்க்காவல் படை வீரா் வெங்கடேசனையும் அவா்கள் சரமாரியாகத் தாக்கியதில் அவா் மயங்கி விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு விரைந்துச் சென்ற காவலா்கள், காயமடைந்த ராஜாகண்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை மீட்டு, செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், வெங்கடேசனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னா் அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தளவாய் காவல் துறையினா், வழக்குப் பதிந்து, காவலா்களை தாக்கிய மதிவாணன், தாமரைக்கண்ணன், இளம்பரிதி ஆகியோரை கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

காவல் நிலையத்துக்கு அருகிலேயே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அரியலூா் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.