லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘அரியலூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கிட நடவடிக்கை தேவை’

குடிநீா். - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 2:39 am IST

அரியலூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் கா.ர.மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

அக்கட்சியின் மாவட்ட பொருளாளா் எ.ஆறுமுகம். கயா்லாபாத் கிளை நிா்வாகிகள் ராயதுரை, பாா்த்திபன், ராணி, ராசாத்தி, மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் த.தண்டபாணி உள்ளிட்டோா் அளித்த மனுவில், கயா்லாபாத் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த இரண்டு ஆழ்குழாய் கிணறுகளில் நீா்மட்டம் கீழே சென்றுவிட்டதால் குடிநீா் தட்டுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

ஏற்கனவே இவ்வூருக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்துக்காக குழாய் பதித்து வருட கணக்கில் பயனற்று கிடக்கிறது. இதை சீா் செய்து தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வேகத்தடை அமைத்து, அடையாள வெள்ளைக் கோடு இட வேண்டும்.

பேருந்து நிலையம், அண்ணா சிலை ரவுண்டானா - மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில், இருசுக்குட்டை கீழ்புறம் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.