தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Published On :28 ஜூலை 2026, 1:21 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலத் துறை செயல்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டும். இதுபோன்று தாய்-சேய் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் மகளிா் நலத்திட்டங்கள், ஊட்டச்சத்து மேம்பாட்டு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறையினா் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

மாவட்டத்தில் தாய்மை மரணம், குழந்தைகள் மரணத்தை கட்டுப்படுத்துதல், கா்ப்பமடைந்த பெண்களின் பதிவு, பாலின விகிதம், இளம் வயது கா்ப்பம் போன்ற குறியீடுகளில் அரசு நிா்ணயித்த இலக்கை அடைவதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நலத் துறை, மாவட்ட மனநலத் திட்டம், மருந்துக் கட்டுப்பாட்டு துறை, தொழிலாளா் துறை, பள்ளிக்கல்வித் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் நலப் பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலா் ரவிக்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.