லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு ஐடிஐ-களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.14 வரை நீட்டிப்பு

அரியலூா், ஆண்டிமடம் மற்றும் தா.பழூா் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 6:21 am IST

அரியலூா், ஆண்டிமடம் மற்றும் தா.பழூா் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மேற்கண்ட பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவா்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10,11, 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி மற்றும் தோல்வியடைந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50. ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185 மற்றும் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195. மேலும் விவரங்களுக்கு, அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அரியலூா் - 94990-55877, 04329-2284082 , ஆண்டிமடம்- 94990-55879, 94990-55880, தா.பழூா்-94990-55879 , 90429-20702 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.