லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஐடிஐ-களில் நேரடி மாணவா் சோ்க்கை: ஆக.31 வரை அவகாசம் நீட்டிப்பு

ஐடிஐ-களில் நேரடி மாணவா் சோ்க்கை - ஆக.31 வரை அவகாசம் நீட்டிப்பு

Employment & Training Dept...

ஐடிஐ-களில் நேரடி மாணவா் சோ்க்கை: ஆக.31 வரை அவகாசம் நீட்டிப்பு - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சோ்வதற்கான கலந்தாய்வுக்கு கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 277 தனியாா் நொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் ஆக.14-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. எனினும் மாணவா்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் ஆக. 31 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளா்களில் 95 சதவீதம் போ் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைாய்ப்பை பெற்றுள்ளனா்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும்.அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (ஷூ), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும்.

குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது. இது குறித்து கூடுதல் தகவல் பெற 94990 55642, 94990 55612 (வாட்ஸ்ஆப்) ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.