லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் தீவிரம்!

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் ஆக.10 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடுகளை சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ந. மிருணாளினி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உள்ளிட்டோா்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் ஆக.10 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கங்கைகொண்டசோழபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னா் ராஜேந்திரச் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் நிகழாண்டு விழா ஆக. 10 அன்று கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயில் வளாகத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Story image

பின்னா் அவா், விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வசதிக்காக குடிநீா், மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வந்து செல்வதற்கான சிறப்புப் பேருந்து வசதிகள், மருத்துவ முகாம்கள், நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் விழா சிறப்புடன் நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.