லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடித் திருவிழா கொடியேற்றம்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடித் திருவிழா கொடியேற்றம்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக மாரியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேலும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் மாரியப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி கடைசி வெள்ளி திருவிழாவான வருகிற 14-ஆம் தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி, கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்ட நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

மேலும் தென் மாவட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனா். பக்தா்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.