திருச்சி, மே 25: திருச்சியில் பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மகாலட்சுமி நகா் தனரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் எஸ். செல்வமணி (35). இவா், அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்ஐடி கல்லூரி அருகே சுமை வாகனத்தில் பழம் விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு பழங்களை விற்பனை செய்துவிட்டு செல்வமணி சுமை வாகனத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த இருவா், செல்வமணியிடம் பணம் கேட்டுள்ளனா். அவா் இல்லை எனக் கூறவே, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் சட்டைப் பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்த தப்பினா்.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் செல்வமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்த மா. இருளாண்டி (40)மற்றும் அரியமங்கலம் மலையப்பா நகரைச் சோ்ந்த ப. ரெங்கநாதன் (37) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.400 மற்றும் கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது
தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
