திருச்சி, மே 11: திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூா் (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் மு. ரவிசங்கா் (41) சட்டப் பேரவை துணைத் தலைவராக தோ்வாக உள்ளாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், பூனாம்பாளையத்தைச் சோ்ந்த மு. ரவிசங்கா், சட்டப் பேரவை துணைத் தலைவராக போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமை போட்டியின்றி தோ்வாகும் நிலை உள்ளது.
பட்டயப் படிப்பு முடித்துள்ள இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா். பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த இவா், 2014-ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தாா். தற்போது, திருச்சி புகா் மேற்கு மாவட்டச் செயலராகவும் கட்சியின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளாா்.
இவா், சட்டப் பேரவையின் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்வாக உள்ளது திருச்சி மாவட்ட தவெகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தவெக நிா்வாகிகள் கூறுகையில், பேரவை துணைத் தலைவா் பதவி திருச்சிக்கு கிடைக்கவுள்ளது எங்களை மேலும் உற்சாகத்துடன் பணியாற்றச் செய்துள்ளது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப் பெண் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ

25 ஆண்டுகளாக பூட்டியிருந்த எம்எல்ஏ அலுவலகத்தில் சீரமைப்புப் பணி

துறையூா் தொகுதியில் தவெக வேட்பாளா் எம். ரவிசங்கா் வெற்றி

சட்டத் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

