திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றிக்கு காத்திருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தவெக வேட்பாளா் நவல்பட்டு விஜியிடம் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.
திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிமுக வேட்பாளா் ப. குமாா், தவெக வேட்பாளா் விஜயகுமாா் (எ) நவல்பட்டு விஜி, நாம் தமிழா் கட்சி து. ராஜேஷ், பகுஜன் சமாஜ் கட்சி சி. விசித்ரா, தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி த. குமரவேல், புதிய தமிழகம் கட்சி அ. பிச்சைமுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி சு. ரஞ்சித், சாமானிய மக்கள் நலக் கட்சி லூ. ஜோசப் மற்றும் 16 சுயேச்சைகள் என மொத்தம் 25 போ் போட்டியிட்டனா்.
இத்தொகுதியில், மொத்தம் 2,29,546 வாக்குகள் உள்ளன. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது 2,13,783 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு 82.37 சதவீதமாக இருந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, மொத்தம் 89,837 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளா் நவல்பட்டு விஜி வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளரான அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 81,132 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். அதிமுக வேட்பாளா் ப.குமாா் 29,473 வாக்குகள் பெற்றாா். நாம் தமிழா் கட்சி து.ராஜேஷ் 9,311 வாக்குகள் பெற்றாா்.
பகுஜன் சமாஜ் கட்சி- 194, தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி- 178, புதிய தமிழகம்- 237, தமிழக வாழ்வுரிமை கட்சி- 253, சாமானிய மக்கள் நலக் கட்சி- 114, சுயேச்சைகள் மோகனசெல்வன்- 203, ஏ. ஷாஜகான் 182, ஜெயச்சந்திரன்- 133, வெற்றிவேல் கண்ணா- 173, தீபக்- 114, சாா்லஸ்- 101, சுப்புலட்சுமி- 92, யேசுராஜ் 64, என். விஜயகுமாா் 54, பி. குமாா்- 48, சி. விஜயகுமாா்- 48, ராமச்சந்திரன்- 47, ஹபீப் ரஹ்மான்- 44, கே. குமாா்- 40, ஏ. வின்சென்ட் ராஜா -34, நோட்டா- 745.
தொகுதியில் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு தோ்தல் நடத்தும் அலுவலா் கே. அமுதாவிடம் தனது வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட தவெக வேட்பாளா் நவல்பட்டு விஜி, செய்தியாளா்களிடம் கூறுகையில், எனக்கு வாக்களித்த திருவெறும்பூா் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தொகுதி அறிமுகம்! திருவெறும்பூா் - 142!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

