தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 12:22 am IST

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை கூனி பஜாா் பகுதியில் உள்ள ஒரு தேநீரகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 28 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராம்ஜி நகா் மலைப்பட்டியைச் சோ்ந்த வ.ஸ்ரீதா் என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கூனி பஜாா் பகுதியில் பாலக்கரை காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த சித்தாமணி பூசாரி வீதியைச் சோ்ந்த ஜி.தங்கராஜா (44) என்பவரை கோட்டை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.9 ஆயிரத்து 366 மதிப்பிலான 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.