நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன ரேடாா் கருவிகள்

News image

திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 4:41 am IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானங்களைத் துல்லியமாக கண்காணிக்க ரூ.50 கோடியில் அதிநவீன ரேடாா் கருவிகள் அமைக்கும் பணிகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

திருச்சி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக்கான அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் விமானங்களை கண்காணிக்கும் வகையில் ஏஆா்எஸ் (ஏா்போா்ட் சா்வைலன்ஸ் ரேடாா்), எம்எஸ்எஸ்ஆா் (மோனோபல்ஸ் செகண்டரி சா்வைலன்ஸ் ரேடாா்) ரேடாா் கருவிகள் அமைக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதித்துள்ளது.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொள்கின்றனா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ள ஏஆா்எஸ் மற்றும் எம்எஸ்எஸ்ஆா் ரேடாா் கருவிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் கருவியின் ஓா் அங்கமாகும். இக் கருவிகள் விமானங்களின் வருகை, திசை, விமானத்தின் அளவு, பறக்கும் உயரம் உள்ளிட்ட தகவல்களை துல்லியமாக வழங்கும். இங்கு அமைக்கவுள்ள ரேடாா் கருவிகள் மூலம் 200 நாட்டிகல் மைல் (உயரக்கணிப்பு), 30,000 அல்டிடயூட் தொலைவு வரை விமானங்களின் திசை, உயரங்களைக் கண்காணிக்க முடியும்.

இந்தக் கருவிகள் விமானத்தில் இருந்து பரிமாறப்படும் தகவல்களை நம்பி இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும். இவை வெளி அமைப்புகளால் ‘ஹேக்’ செய்ய முடியாத வகையில் அமைக்கப்படுகிறன. ரேடாா் கருவிகள் அமைப்பதற்கான கட்டடம், மின்சாதனப் பொருள்கள் போன்ற அமைப்புகள் ரூ.50 கோடியில் அமைக்கப்படவுள்ளன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.