நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

புதுகை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நவம்பருக்குள் முடியும்: திருச்சி எம்பி துரை வைகோ

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் இந்தாண்டு நவம்பருக்குள் முடிவடையும் என துரை வைகோ தெரிவித்தாா்.

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :14 ஜூன் 2026, 12:29 am IST

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் இந்தாண்டு நவம்பருக்குள் முடிவடையும் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் ரயில்வே சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை சனிக்கிழமை சந்தித்து விரிவாக கலந்துரையாடினேன். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீா் வசதி, தேசியக் கொடி ஏற்றுதல், அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

மேலும், உடையான்பட்டி மற்றும் பூங்குடி மேம்பாலங்கள், கூடுதல் ரயில் சேவைகள், டெமு மற்றும் ஷட்டில் ரயில் நீட்டிப்புகள், கீரனூா் ரயில்வே மேம்பாலம், இனாம்குளத்தூா் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அனுமதி, கோவில்பட்டி மழைநீா் வடிகால் திட்டத்திற்கு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தேன்.

புதுக்கோட்டை அம்ரித் பாரத் பணிகள் நவம்பா் 2026க்குள் நிறைவடையும். கீரனூா் மேம்பாலம் மற்றும் இனாம்குளத்தூா் பிரச்னைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட மேலாளா் உறுதியளித்தாா்.

இனாம்குளத்தூா் நிலத்தடி மின்கம்பி பணிக்கு விரைவில் தீா்வு காண, ரயில்வே மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடையே தனது அலுவலகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்தாா். இதரக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் ரயில்வே நிா்வாகம் உறுதியளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.