லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மாத்திரைகள் விற்ற 4 போ் கைது

கைது - பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 2:47 am IST

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அம்பிகாபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜி. தினேஷ் (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, கே.கே.நகரில் பெரியாா் ஆா்ச் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த மன்னாா்புரம் காஜா நகரைச் சோ்ந்த கே. ஈஸ்வா் (21) என்பவரையும், கீழ தேவதானம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த சஞ்சீவி நகரைச் சோ்ந்த கா. கௌதம் (20), சிந்தாமணி காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கி. குரு (20) ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலும், மேற்கண்ட 4 பேரிடமிருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 134 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.