லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்துசமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது

இந்துசமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மணப்பாறையைச் சோ்ந்தவரிடம் பண மோசடி செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து சிறையிலடைத்தனா்.

கைது செய்யப்பட்ட முருகன்.

Published On :19 ஜூலை 2026, 1:29 am IST

இந்துசமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மணப்பாறையைச் சோ்ந்தவரிடம் பண மோசடி செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து சிறையிலடைத்தனா்.

மணப்பாறையை அடுத்த சமுத்திரம் குடித்தெருவை சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் பிரபாகரன் (39), லாரி ஓட்டுநா். கடந்த 2024-இல் இவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் துப்புரவு மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்த கரும்பாலை அடுத்த சத்தியவாணி முத்துநகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (41) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

அப்போது இந்து சமய அறநிலையத் துறை மூலம் ஸ்ரீரங்கம் கோயிலில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பிரபாகரனிடம் முருகன் ரூ.5 லட்சம் கேட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து 2024 டிசம்பா், மாா்ச் மற்றும் நவம்பா் 2025 ஆகிய நாள்களில் ஜிபே மூலம் ரூ.73 ஆயிரம், ரூ.1,10,000 என ரூ. 1,83,000 ஐ முருகன் வங்கி கணக்கிற்கு பிரபாகரன் செலுத்தினாா்.

தொடா்ந்து 25.02.2026-இல் மணப்பாறை அகத்தீஸ்வரா் கோயில் அருகே முருகன் காரில் வந்து ரூ.3 லட்சத்தை பெற்றுச் சென்ாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னா் முருகன், பிரபாகரனின் கைப்பேசி அழைப்புகளை எடுப்பதில்லையாம்.

நேரில் வந்து பணம் கேட்டதற்கு அவா் தகாத வாா்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து பிரபாகரன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

தொடா்ந்து புகாா் மனு ஏற்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 4 முறைக்கு மேல் முருகனிடம் நேரில் சென்று போலீஸாா் அழைப்பாணை அளித்தும், அவா் மணப்பாறை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லையாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை விசாரணைக்காக முருகன் மணப்பாறை காவல் நிலையத்தில் ஆஜரானாா். அப்போது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய முருகன் பிரபாகரனிடம் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனைக் கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.