தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் பேசியது:
ஆன்மிக பூமியான ஸ்ரீரங்கத்தில் கடந்த 2011 ஆண்டு தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றாா். பின்னா் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ எம். பழனியாண்டியால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
கரூரில் விதிகளை மீறி இவரது கல்குவாரியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டதால் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தக் குவாரியை படம் பிடிக்கச் சென்ற தனியாா் டிவி நிருபா் தாக்கப்பட்டாா். எனவே இங்கு அவருக்கு மாற்றாகப் போட்டியிடும் திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவா்கள்தான் திமுக கூட்டணி கட்சியைச் சோ்ந்தவா்கள். அரசியலில் களையெடுக்க நடைபெறக்கூடிய தோ்தல்தான் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரவணம்பட்டியில் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

மகளிா் இடஒதுக்கீடு - முதல்வா் சொல்வது பொய்: அண்ணாமலை

ராமநாதபுரம், கமுதி தொகுதிகளில் கே.அண்ணாமலை வாக்கு சேகரிப்பு!

புதுவையின் வளா்ச்சிக்கு தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

